லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயம் வைத்து சூதாடி கணவர் தோற்றதால், அவரது மனைவியை ஆட்டத்தில் வெற்றிபெற்ற கும்பல் தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஜான்பூர் பகுதியை சேர்ந்த நபர், தனது மனைவியை அடகாக வைத்து சூதாடியுள்ளார். இதில் அவர் தோற்கவே வெற்றி பெற்ற கும்பல், அந்த பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தனர். இதைக்கண்டும், அவரது கணவர் மீட்க முன்வரவில்லை.
இதனால் கொதிப்படைந்த அந்த பெண், தனது கணவரை பிரிந்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். சில நாள் கழித்து, அந்த பெண்ணை நேரில் சந்தித்து மன்னிப்பு கூறி, மீண்டும் தனது வீட்டுக்கு காரில் அழைத்து வந்துள்ளார். வரும் வழியில் காரில், அவரது சூதாட்ட நணர்களும் இணைந்து மீண்டும் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண் அருகில் உள்ள காவல்துறையில் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினரோ அவரது புகார்மீது நடவடிக்கை எடுக்க தயங்கியதால், நீதி மன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜாபராபாத் காவல் நிலையம் எப்ஐஆர் பதிவு செய்து வழக்க பதிவு செய்தனர்.
இதையறிந்த கணவரின் நண்பரான 3பேரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. , பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.