சாதிவாரியாய் வகுப்புகள்..உத்தரப் பிரதேசத்தில் ஒரு பள்ளி.
ஏ செக்சன் உயர் சாதியினருக்கு. பி செக்சன் இதரப் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு
சி செக்சன் தாழ்த்தப்பட்டவர்களுக்கு.
உ.பி., ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சேத் பூல்சந்த் பாக்லா எனும் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியின் முதல்வர்(ப்ரின்ஸ்பால் ) ராதே ஷ்யாம் வார்ஸ்னே.
இவர் அங்கு பயிலும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை சாதிவாரியாக பிரித்து தீண்டாமையில் ஒரு புது அத்தியாயத்தையே எழுதியுள்ளார்.
இது மட்டுமின்றி அந்த வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமிப்பதிலும் தீண்டாமையை பின்பற்றியுள்ளார். உயர்சாதி வகுப்பிற்கு உயர்சாதி ஆசிரியர், பிற்பட்ட வகுப்பிற்கு பிற்படுத்தப்பட்ட சாதியச் சேர்ந்த ஆசிரியர் , தாழ்த்தப்பட்ட வகுப்பிற்கு தாழ்த்தப்பட்ட ஆசிரியர் என டதேர்வுசெய்து பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இந்தப் பள்ளி முதல்வர் மீது வந்த தீண்டாமைப் புகாரையடுத்து ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி ஏ.கே.சிங் இந்தப் பள்ளியில் நிலவும் தீண்டாமை குறித்து விசாரணை மாவட்ட கல்வி ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
மாவட்ட நீதிபதி கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் இந்தப் புகார் உண்மை என்று தெரியவந்ததால் பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டார். சாதி அடிப்படையில் நியமிக்கப்பட்ட மூன்று ஆசிரியர்களும் நீக்கப்பட்டு உள்ளனர். முழு விசாரனைக்கு பிறகு முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பள்ளி முதல்வர் வார்ஷ்னே இந்த தீண்டாமையை கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி துவங்கிய கல்வியாண்டில் அறிமுகப்படுத்தினார். வகுப்பு பிரிப்பில் வேற்றுமை உள்ளதாக மாணவர்கள் புகார் கூறியதை அடுத்து இந்த செயல் வெளிச்சத்திற்கு வந்தது. முதற்கட்ட விசாரணையில் , ஏ செக்சனில் அதிக பொதுப்பிரிவு மாணவர்களும் , பி செக்சனில் அதிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் , சீ செக்சனில் அதிக தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இருந்ததும் உறுதிசெய்யப்பட்டது.
இந்த வேற்றுமையை களைந்து மாணவர்களை சமமாக பிரிக்கும் படி பள்ளி நிவாகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பள்ளி முதல்வர் 1995ல் ஒரு ரிட் மனு தாக்கல் செய்து அலிகr விஸ்பாராவில் உள்ள விஷாரா உயர்நிலைப்பள்ளியில் இருந்து தன் தாயாரின் வயதினைக் காரணம் காட்டி தற்பொழுது பணிபுரியும் பள்ளிக்கு மாற்றல் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது ( ஆதாரம்).
உத்தரப்பிரதேசத்தில் பொதுவாய் தாழ்த்தப்பட்டவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவது சாதாரணமாய் இருந்தாலும், இந்தப் பள்ளியில் நடைபெற்றது முன்னெப்பொழுதும் கேட்டிராத செயல்.
தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல்வாதிகளும் இந்த சாதி வேறுபாட்டை நிலைநிறுத்தி வாக்குவங்கியை தக்கவைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.