உஜ்ஜைனி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடி விகாஸ்துபேவை கைது செய்ய காவல்துறையினர் சென்றனர்.
அப்போது ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
இது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தப்பிச் சென்ற ரவுடி விகாஸ் துபேவை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் மத்டியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினி காவல் நிலைய காவலர்கள் விகாஸ் துபே வை கைது செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த தகவலை உபி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.