லக்னோ,
உபி. மாநிலத்தில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் இன்று 5வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருது.
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குப்பதிவு 51 தொகுதிகளில் இன்று பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 51 தொகுதிகளில் சுமார் ஒரு கோடியே 84 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.
இந்த தொகுதிகளில் 43 பெண்கள் உள்பட 617 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பல்ராம்புர், கோண்டா, சந்த் கபீர்நகர், சித்தார்த் நகர், பைசாபாத் மற்றும் காங்கிரசின் செல்ல தொகுதியான அமேதியிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது 5வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருஐகிறது.
இந்த தேர்தலில், சமாஜ்வாடி – காங்கிரஸ் கூட்டணி ஒரு அணியாகவும், மைத்துள்ளன பாஜக தனி அணியாகவும், பகுஜன் சமாஜ் தனி அணியாகவும் களத்தில் உள்ளன. அங்கு மும்முனை போட்டிநிலவுகிறது.