லக்னோ :
நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் “கோன் பனேகா குரோர்பதி” (கோடீஸ்வரன்) நிகழ்ச்சியின் 12 ஆம் பகுதி இப்போது டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சிறப்பு ஒளிபரப்பில் நடிகர் அனூப் சோனியும் சமூக சேவகர் வில்சனும் கலந்து கொண்டனர்.
அப்போது 6 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைக்கான கேள்வி கேட்கப்பட்டது.
“1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி டாக்டர் அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் எந்த நூலின் நகலை எரித்தனர்?” என்பது அந்த கேள்வியாகும்.
விடைகளாக, விஷ்ணு புராணம், பகவத்கீதை, ரிக்வேதம், மனுஸ்மிருதி ஆகிய நூல்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.
இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
“இது தவறானது” என ஒரு தரப்பும். “இது பொது அறிவு கேள்வி . தப்பில்லை” என இன்னொரு தரப்பும் மோதிக்கொண்டிருக்க – உத்தரபிரதேச மாநிலம் லக்னோ காவல்நிலையத்தில், “இந்த கேள்வி இந்துக்களின் மனதை புண் படுத்துவதாக உள்ளது” என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போலீசார் அமிதாப்பச்சன் மீதும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
– பா.பாரதி