லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கான 7வது கட்ட தேர்தல் வரும் 7ந்தேதி (நாளை மறுதினம் – திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இது இறுதிக்கட்ட தேர்தல் ஆகும். இதையொட்டி, தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5மணியுடன் முடிவடைந்தது. தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்டங்களாக தேர்தல்  வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில்,  7வது கட்ட வாக்குப்பதிவு  தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இந்த தேர்தலானது  அசம்கர், ஜான்பூர், காஜிபூர், வாரணாசி, சந்தோலி, மிர்சாபூர், சோன்பத்ரா மற்றும் பதோஹி (சாந்த் ரவிதாஸ் நகர்) ஆகிய மாவட்டங்களில் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 54 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 54 தொகுதிகளுக்கு 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அதிகபட்சமாக ஜான்பூர் தொகுதியில் 25 வேட்பாளர்களும், வாரணாசி மாவட்டத்தில் உள்ள பிந்த்ரா மற்றும் ஷிவ்பூர் உள்ளிட்ட இரண்டு இடங்களுக்கு தலா ஆறு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 7ந்தேதி காலை 7மணி முதல் மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.