வுன்பூர், உத்திர பிரதேசம்

பி துணை முதல்வர் தினேஷ் ஷர்மா முகலாய மன்னர்கள் நம் மூதாதையர்கள் அல்ல என்றும் கொள்ளைக்காரர்கள் எனவும் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

பா ஜ க ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் தினேஷ் ஷர்மா.   இவர் சமீபத்தில் அராசு சார்பற்ற பயணமாக ஜவுன்பூர் வந்தார்.   அப்போது சில பத்திரிகையாளர்களை அவர் சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்பில் தினேஷ் ஷர்மா, “நமது பாடத்திட்டத்தில் பல தவறான தவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  பாடத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள படி  முகலாய மன்னர்கள் நம் மூதாதையர்களே அல்லர். அவர்கள் கொள்ளைக்காரர்கள்.   இதற்காக நான் அனைவரையும் குற்றம் சொல்வதாக  எண்ண வேண்டாம்.  முகலாய மன்னர்களில் கடைசி மன்னரான பகதூர் ஷா ஜஃபார் மிகவும் நல்ல அரசர்.  அவர் முதலாம் சுதந்திரப் போராட்டத்தை நடத்திய மங்கள் பாண்டேவுக்கு பல உதவிகள் செய்துள்ளார்.  அதே போல் அக்பர் செய்த நல்ல விஷயங்கள் சரித்திரத்தில் இடம் பெற்றால் தவறில்லை.

ஆட்சிக்கு வர தந்தையை கொன்ற மகனும்,  தாஜ்மகால் போல இன்னொரு கட்டிடத்தை கட்டக்கூடாது என்பதற்காக கைககளை வெட்டிய மன்னனும்  நமது பண்பாட்டுக்கு ஒத்து வராதவர்கள்.  நமது கலாச்சாரம் பல கலைஞர்களையும் அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளையும் மதிக்கும் கலாச்சாரம் ஆகும்.  விரைவில் பாடத்திட்டம் மாற்றப்பட்டு முகலாய மன்னர்களைப் பற்றிய உண்மைகள் வெளியே கூறப்படும்.

குர்கானில் ஒரு பள்ளியில் ஒரு மாணவன் கொல்லப்பட்ட அநியாயம் நடந்துள்ளது.  உத்திரப் பிரதேசத்தில் அது போல நிகழ்வு நடக்க இந்த அரசு அனுமதிக்காது.   அதற்கேற்ப புதிய சட்டங்கள் இயற்றப்படும்   துரதிருஷ்ட வசமாக அப்படி ஏதும் நடந்தால் பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்” என கூறி உள்ளார்.