உத்திரபிரதேச மாநிலம் சுல்தானப்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பியுள்ளார்.
ஜூலை 26ம் தேதி சுல்தானப்பூருக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ராம்சேட் என்பவரைச் சந்தித்தார்.
தொழிலில் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்த ராகுல் காந்தி அவரது அன்றாட வருமானத்தை அதிகரிக்க என்ன வழி என்று கேட்டறிந்தார்.
மறுநாள் தனது உதவியாளர்கள் மூலம் அவருக்கு செருப்பு தைக்கும் தையல் மெஷினை பரிசாக ராகுல் காந்தி அனுப்பிவைத்தார்.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ராம்சேட் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததோடு தனது கையாலேயே இரண்டு ஜோடி காலணிகளை ராகுல் காந்திக்காக தைத்துக் கொடுத்தார்.
அதில் எந்த ஜோடி அவரது காலுக்கு ஏற்றதாக இருக்குமோ அதை அவர் அணிந்துகொள்ளக் கூறி அதனை ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்தார்.
https://x.com/RahulGandhi/status/1820416537943003240
காலணிகளை பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி ராம் சேட்டுக்கு போன் செய்து நன்றி கூறியதோடு அந்த காலணிகளை அணிந்து ராமசேட்டை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இதை வீடியோவாக தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.