லக்னோ: முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது: எனது அலுவலகத்தில் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சில நாள்களாக கொரோனா தொற்று பாதிப்பு பெரிதளவில் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் அங்கு புதிதாக 18,021 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த நிலவரப்படி 95,980 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel