லக்னோ:

த்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

பகல் 2.30 மணி நிலவரப்படி  2 லோக்சபா தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் முன்னிலை வகித்து வருகின்றனர். அவர்களின் வெற்றி உறுதியாகி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

இதன் காரணமாக பாஜகவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அவர் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற கோரக்பூர் லோக் சபா தொகுதியில், தற்போது சமாஜ்வாதி பார்ட்டி  உறுப்பினர் பிரவீன் குமார் நிசாத் 1,63,941 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

அதுபோல, மற்றொரு தொகுதியான பஹல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் 1,11,668 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக இரண்டு லோக்சபா தொகுதியையும் சமாஜ்வாதி கட்சி கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.

இந்த தேர்தலில் உ.பி.யில் மும்முனை போட்டி நிலவியது., பாஜக தனியாகவும், காங்கிரஸ் தனித்தும் போட்டி யிட்டது. அதுபோல தனித்து போட்டியிட்ட முலாயம் கட்சிக்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில், பாஜக ஆளும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில்  விரைவில் சட்டமன்ற  தேர்தல் வர உள்ள நிலையில், உ.பி.யில் பாஜவுக்கு விழுந்துள்ள அடி, மத்திய பாஜக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

2019 லோக்சபா தேர்தலில், மாநில சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து, நடத்த எண்ணியுள்ள பாஜக அரசு, குஜராத் மற்றும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் மற்றும் உ.பி. தேர்தல் முடிவின் காரணமாக அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.