லக்னோ:
சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.
உ.பி. மாநிலம் கன்னோஜ் தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி. ஆனவர் அகிலேஷ் யாதவ். 2012-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அகிலேஷ் முதல்வராக பதவி ஏற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில சமாஜ்வாடி ஆட்சியை இழந்தது.
இந்த தேர்தலில் அகிலேஷ் போட்டியிடவில்லை. இந்நிலையில் 2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட அகிலேஷ் முடிவு செய்துள்ளார். அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மெயின்பூரி தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்த தகவலை அகிலேஷ் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி உ.பி.யில் ஆட்சியில் இல்லாத நேரத்தில் அதன் தலைவர் எம்.பி.ஆகிவிடுவது வழக்கம். இந்த வரிசையில் அகிலேஷூம் தற்போது எம்.பி.ஆக திட்டமிட்டுள்ளார்.