இந்தியப் பெருங்கடலில் உள்ள பல குட்டித்தீவுகள் அடங்கிய ஒரு குடியரசு நாடு மாலத்தீவுகள். தற்போது அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நிலைத்தன்மை யற்ற சூழலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தற்போதய அதிபர் அப்துல்லா யாமீனை வீழ்த்த முன்னாள் அதிபர் நஷீத் தலைமையில் சதிதிட்டங்க்கள் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல்முறையாக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது நஷீத் பதவியேற்றதோடு 30 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த மவுமூன் அப்துல் கயூமின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆனால் நஷீதால் அங்கு நிம்மதியாக ஆட்சி நடத்த முடியவில்லை. ஒரு நீதிபதி கைது செய்யப்ப்டாதால் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தின் விளைவாக 2012-ஆம் ஆண்டுஅவர் அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். இதற்கு பின்னனியில் முன்னாள் சர்வாதிகாரி மவுமூன் அப்துல் கயூம் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அதன்பின்னர் 2013-இல் நடைபெற்ற தேர்தலில் எதிர்கட்சியைச் சேர்ந்த அப்துல்லா யாமீன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு வந்தார். இவர் பதவியேற்றபின்பு 2015- மார்ச்சில் முன்னாள் அதிபர் நஷீத் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பிரிட்டன் அரசு தஞ்சம் வழங்கியிருந்தது.
இச்சூழலில் நஷீதும், மாலத்தீவு அரசுக்கு எதிரான அதிருப்தி தலைவர்களும் இலங்கை கொழும்பு நகரில் கூடி அரசை வீழ்த்த திட்டம் தீட்டுவதாக தெரியவந்துள்ளது. ஒரு இணையதளத்தில் வெளிவந்த இந்த செய்தியை நஷீதுக்கு நெருக்கமான சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர்,
அரசுக்கு விரோதமாக சதி நடந்து வருவதாக மாலத்தீவு அரசு தரப்பு அவ்வப்போது புகார் தெரிவித்து வந்தாலும். இந்த செய்திபற்றி கருத்துக்கூற மறுத்துவிட்டது.
முன்னாள் அதிபர் நஷீத் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பிரிட்டன் அரசு தஞ்சம் வழங்கியிருந்தது. இச்சூழலில் நஷீதும், மாலத்தீவு அரசுக்கு எதிரான அதிருப்தி தலைவர்களும் இலங்கை கொழும்பு நகரில் கூடி அரசை வீழ்த்த திட்டம் தீட்டுவதாக தெரியவந்துள்ளது. ஒரு இணையதளத்தில் வெளிவந்த இந்த செய்தியை நஷீதுக்கு நெருக்கமான சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர்,