இந்தியாவில் ஏதோவொரு மூலையில் இருந்துக் கொண்டு (நாங்கள் அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக அவரது இடத்தை வெளிப்படுத்தவில்லை) வந்த இருபதுகளில் உள்ள இந்த முகம் தெரியாத வாலிபர் தான் மிகப்பெரிய சமூக ஊடகத்தளமான பேஸ்புக்கில் பிரபலமாகி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைந்த சக்தியை விட, பிஜேபிக்கும் குறிப்பாக அதன் தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கும் வருத்தத்தையும் குடைச்சலையும் கொடுத்துவருகிறார்.
இவர் பேஸ்புக்கில் சுவாமியின் பெயரில் ஒரு பிரபலமான பகடி கணக்கு வைத்து சுப்பிரமணியன் சுவாமியை ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் தவறான வழியில் முறைத்துக் கொண்டுள்ளார்.
அவருக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக, சுவாமி இந்த வாலிபருடைய கணக்கை முடக்கிவிடுவதாக அச்சுறுத்தினார், ஆனால் ஃபேஸ்புக் சுவாமியின் சொந்த பக்கத்தை முடக்கி, பாதிப்பிற்குள்ளாக்கியது.
இந்த வாலிபர் ஒரு தகவல் தொழில்நுட்ப நிர்வாகி. கிட்டதட்ட இரண்டு லட்சம் பேர் பின்பற்றும் இவரது பேஸ்புக் பக்கமான அன் அஃப்ஃபீஷியல் சுப்பிரமணியம் சுவாமி பக்கத்தை முடக்கியபின் சமீபத்தில் செய்தியில் பரபரப்பாக பேசப்பட்டார்.
இவரது ஃபேஸ்புப் பக்கம் தடை செய்யப்படும் செய்தி மின்னல் வேகத்தில் பரவி அப்பக்கத்தின் நிர்வாகிக்கு சமூக ஊடக தளங்களில் ஆதரவு நிரம்பி வழிந்தன. விரைவில் ஃபேஸ்புக் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது, அதனால் செவ்வாய் அன்று அந்த பக்கம் மீட்கப்பட்டது.
இந்த பகடிக் கணக்கை மீட்கும்போது, இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவரின் கணக்கையும் ஃபேஸ்புக் மீட்டது, அதை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தான் .
சுவாமியை பகடி கணக்கு மூலம் படுத்தும் அந்த ஆசாமி ஜன்தாகாரிபோர்டர்.காமிடம், “சுவாமி அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிரும் விஷயங்களை கண்டு நான் எப்போதும் வியப்பும் அதிர்ச்சியுமடைந்துள்ளேன்” என்றார். அவை எரிச்சலூட்டுவனவாகவும், முக்கியமாக அது பகுத்தறியும்தன்மையை மீறிவதாகவும் இருந்தன. எனவே, நான் அவரது பக்கத்தைப் போலவே ஒரு பக்கத்தை உருவாக்கி இந்தியாவின் சிறுபான்மை சமூகங்களை நோக்கி அவர் போடும் பைத்தியக்காரத்தனமான சமூக ஊடக பதிவுகளை கேலி செய்ய முடிவுசெய்தேன். என் முதல் பதிவு உடனடி வெற்றியைக் கொடுத்து, எனது நையாண்டியான, சில நேரங்களில் கடுமையாக தாக்கும் ஃபேஸ்புக் எதிர் பதிவுகளைத் தொடர காரணமாக இருந்தது. குறைந்த காலத்திலேயே எனது பக்கம் ஒரு மகத்தான வெற்றியடைந்தது. ”
சுவாமி அவரை குற்றம் சாட்டியதுப் போல அவருக்கு எந்த அரசியல் தொடர்பும் இல்லை என கூறினார். அப்படி இருப்பது அவருக்கு பிடித்திருப்பதாகவும் ஏனெனில் இந்தியாவின் பன்முகக்கலாச்சாரத்தின் மதிப்புகளை மீறும் எந்தவொரு கட்சியையும் அதன் தலைவர்களையும் தன்னால் எதிர்த்து கேள்வி கேட்க முடிகிறதென்றும் கூறினார்.
“பல்வேறு மத பின்னணி உள்ள மக்கள் மத்தியில் ஒற்றுமைக்கு பேர் போனது எனது நாடு. சுவாமி போன்ற தலைவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விஷத்தை கலந்து தங்களால் முடிந்த அளவு தொந்தரவு செய்துள்ளனர். இது கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
எனினும், வெற்றுத்தனமாக அவரது சகோதரர்கள் சிலரைத் தவிர அவரது குடும்பத்தினருக்குக் கூட அவர் பகடி பக்கம் வைத்திருக்கும் விஷயம் பற்றி தெரியாது என்று சுவாமியின் பகடி ஃபேஸ்புக் பக்க உரிமையாளர் ஒப்புக்கொள்கிறார்.
“மகிழ்ச்சியில் நான் ஒரு முறை என்னுடைய நண்பர்கள் சிலருக்கு சொன்னேன். ஆனால் அது தவறு என்று எனக்குப் புரிந்தது. என் உடன்பிறப்புகளுக்குத் தெரியும் ஆனால் எனது பெற்றோருக்குத் தெரியாது. ஏனெனில் இந்த பகடி கணக்கை மூட அனைத்து உரிமையுள்ள இரண்டே பேர் எனது பெற்றோர்கள் தான். எனவே, அவர்களுக்கு என் பக்கத்தைப் பற்றியும் அதைச் சுற்றியுள்ள சர்ச்சை பற்றியும் தெரியாமல் இருப்பது நல்லது. ”
இந்த சமீப சர்ச்சை அவரை இன்னும் வலுவாக மாற்றியுள்ளதாகவும் எதிர்காலத்தில் இன்னும் சக்தியுடன் ‘சுவாமி மற்றும் ஆர்எஸ்எஸ்’ இன் பொய்களை அம்பலப்படுத்த திட்டமிட்டுள்ளேன் என அவர் தெரிவித்தார்.
“என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக கூறிக்கொள்ள விரும்பும் சுவாமி பற்றி ஒரு உதாரணம், செவ்வாய் இரவு சிஎன்என்-ஐபிஎன் ல் புகைப்படம் இல்லாதவரையில் பகடி கணக்கில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையென சுவாமி கூறியுள்ளார். எனது பக்கம் மீண்டும் செயல்பட தொடங்கிய பிறகு ஒரு வண்டியில் ஸ்மிருதி இரானி இருப்பது போல் புகைப்படத்தை மாற்றினேன். ஆனால் சுவாமி சிஎன்என்-ஐபிஎன் ல் பேசியதைக் கேட்ட பிறகு, இரானியின் புகைப்படத்திற்குப் பதிலாக சுவாமியின் புகைப்படத்தை மாற்றினேன். இப்போது கூறுங்கள் நான் சுவாமிக்கு பயப்படுகிறவனா” என்று பகடி பக்க ஆசாமி கூறினார்
அன்றைய நாளின் நடப்பு விவகாரங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கான நகைச்சுவைப் பதில்களை கொண்டு வருவதை அவர் எப்படி நிர்வகிக்கிறார்?
“என்னுடைய வேலையில் வீட்டில் இருந்து நிறைய வேலை செய்வது இன்றியமையாததாகிறது “. சில நேரங்களில், நான் அலுவலக வேலையில் மூழ்கியிருக்கும் போது, பதிவுகளைத் திட்டமிட முனைகிறேன். என் பக்கத்தை விரும்புவோர் என்னிடமிருந்து வழக்கமான எதிர்வினைகளை எதிர்பார்க்கின்றனர் அதனால் நான் அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை” என்கிறார்.
புதனன்று தமிழ்நாடு முதலமைச்சர், ஜெயலலிதா, சுவாமிக்கு வருத்தத்தை கொடுத்ததற்காகத் தன்னை பாராட்டியதாக சுவாமியின் பகடி கணக்கு பக்கம் தெரிவித்தது.
இதற்கிடையில், பகடி கணக்குப் பக்கத்திற்கு லைக்குகள் குவிந்துகொண்டு இருக்கின்றது ஆனால் மூத்த வழக்கறிஞரும் பாஜக மூத்த தலைவருமான சுவாமியின் அதிகாரப்பூர்வ பக்கம் மர்மமான காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.