நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டிற்கான தன் பங்கு நிதியை முழுமையாக வழங்கியமைக்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது ஐ.நா. சபை.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஐ.நா. சபை சமீபகாலமாக கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக அதன் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெஸின் வருத்தமுடன் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்திய தனது பங்கு நிதியை முழுமையாக வழங்கியுள்ளதாக ஐ.நா. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் போன்று ஆர்மேனியா, போர்ச்சுகல் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளும் தங்களின் பங்கு நிதியை முழுமையாக செலுத்தியுள்ளன.
நிதிப் பற்றாக்குறையால் தனது அலுவலக செயல்பாடுகள் பலவற்றை குறிப்பிட்ட நாட்களில் நிறுத்தி வைக்கும் நிலைக்கு சமீபநாட்களில் தள்ளப்பட்டது ஐ.நா. என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகளே தாங்கள் வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் செயல்பாடுகளைப் பார்த்து வேறுசில நாடுகளும் இதை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா. வட்டாரம், இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது.
இந்தக் குறிப்பிட்ட 4 நாடுகளின் செயல் ‘ஐ.நா. 2020 ஹானர் ரோல்’ என்று குறிப்பிடப்படுகிறது.