நியூயார்க்: இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அதிகளவிலான கார்பன் வாயுவை வெளியேற்றி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “பாரிஸ் பவருநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை மதிக்காமல் பல நாடுகள் நடந்து கொள்கின்றன. இந்த நாடுகள், அதிகளவிலான கார்பன் வாயுவை வெளியேற்றி வருகின்றன.

குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அதிகளவில் கார்பனை வெளியேற்றி வருகின்றன. 80% கார்பன் வெளியேற்றத்திற்கு ‘ஜி – 20’ நாடுகளே முக்கிய காரணம்.

இதனால், உலக நாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முக்கிய நாடுகள், கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து, 2050ம் ஆண்டுக்குள் ‘ஜீரோ கார்பன்’ என்ற நிலையை எட்ட வேண்டும்.
அப்படி நடந்தால்தான் பயன் உண்டு. இல்லையெனில், அடுத்த நிலையிலான நாடுகள் இதுதொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் எந்த பலனும் இருக்காது” என்றார் அவர்.