டெல்லி: மத்திய அரசின் 5ம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 15 முதல் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா லாக்டவுன் 5ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. திரையரங்குகள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை அக்டோபர் 15 முதல் மீண்டும் திறக்க அனுமதி தரப்பட்டு உள்ளது.
அக்டோபர் 5 முதல் ஹோட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்கலாம். பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி மாநிலங்கள் முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel