புதுடெல்லி: 
காராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் முழு அடைப்பு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு இரண்டாம் கட்ட தளர்வுகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு  இரண்டாம் கட்ட தளர்வுகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில் சில பொருளாதார மற்றும் சமூக செயல்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிமுறைகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகத்திடம் கலந்தாலோசித்து, அதன் அடிப்படையிலேயே இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இரயில்வே மற்றும் உள்நாட்டு விமானங்கள் சில விதிமுறைகளின் அடிப்படையில் விரிவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்ற பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
மத்திய அரசு மே 30ஆம் தேதி முழு அடைப்பை நீடித்த நிலையில் ஜூன் 8-ஆம் தேதி முதல் முதற்கட்ட தளர்வுக்கு அனுமதிக்கப்பட்டன.
தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு
* வழிபாட்டுத் தலங்கள்
* உணவகங்கள்
* வணிக வளாகம்
* ரயில்வே மற்றும் உள்நாட்டு விமான சேவை வரையறுக்கப்பட்ட முறையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, சில விதிமுறைகளின் அடிப்படையில் விரிவாக்கப்படும்.
* இரவில் ஊரடங்கு நேரமும் தளர்த்தப்பட்டுள்ளது- இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை முழு ஊரடங்கு.
* மத்திய மற்றும் மாநில நிர்வாகத்தின் பயிற்சி நிலையங்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் துவங்கப்படும்.
* உள் மாநிலங்களுக்கு உள்ளே இயக்கப்படும், பொருட்கள் மற்றும் நபர்களுக்கு எந்த விதிமுறைகளும் இல்லை
தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ள செயல்பாடுகள் கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளன
* மெட்ரோ ரயில்
* சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பார்கள் மற்றும் பொது அரங்குகள்.
* சமூக ,அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி கலாச்சாரம் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் தவிர்க்கப்படவேண்டும்.
* பள்ளிகள், கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் ஜூலை 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
இவை அனைத்தும் திறக்கும் தேதிகள், நிலைமை மதிப்பீட்டின் அடிப்படையில் தனியாக முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.