திருப்பதி
திருப்பதியில் தரிசன டிக்கட்டுடன் வருவோருக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தேவையான அளவு லட்டுகள் வழங்கப்பட உள்ளது.
திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த லட்டு பிரசாதத்தை ஆதார் அட்டையை காட்டி ஒரு அட்டைக்கு 2 லட்டு வீதம் மட்டுமே கொடுக்கப்படும் என செய்திகல் வெளியானது. இது தரிசனம் செய்யாமல் லட்டு வாங்குவோருக்கு மட்டும் என்பது புரியாததால் பக்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
நேற்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ்,
”சாமி தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவையான அளவு லட்டு வழங்கப்படும். நாளை முதல் ஒரு லட்டு ரூ.50 என்ற கட்டணத்தில் பக்தர்கள் தேவைப்படும் லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
சாமி தரிசனம் செய்யாதவர்களுக்கு, ஆதார் அடிப்படையில் தலா 2 லட்டுகள் மட்டும் வழங்கப்படும். பக்தர்களுக்கு அன்லிமிடெட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்ற பாலிசியை தேவஸ்தான நிர்வாகம் இதுவரை கவனிக்காமல் இருந்துவிட்டது”
என்று அறிவித்துள்ளார்.