டெல்லி: பல்கலைக்கழகங்கள் விருப்பப்பட்டால் முதலாம், 2ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கல்வி நிறுவனங்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளதால், கல்லூரி இறுதித்தேர்வு தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம் என யுஜிசி கூறியது. ஆனால், இறுதி செமஸ்டர் தேவையும் ரத்து செய்ய வேண்டும் என சில மாநில அரசுகள், மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இறுதி பருவத்தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.
மேலும், தேர்வை எழுதாமல் பட்டங்களை வழங்கக்கூடாது என தெரிவித்தது. இதனையடுத்து, வரும் 30ம் தேதிக்குள் தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி பல்கலைகழகங்களுக்கு யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், பல்கலைகழகங்கள் விரும்பினால், முதலாம், இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்தலாம் என்றும், யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு தேர்வை நடத்தலாம் என தெரிவித்துள்ளது. மேலும் மாணவர் அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்தது.