உத்தரபிரதேசத்தில் ₹750 கோடி முதலீட்டில் ஒரு புதிய மதுபான ஆலையை அமைக்க யுனைடெட் ப்ரூவரீஸ் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.

வட இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டு இந்த ஆலை துவங்கப்பட உள்ளது.

இந்த முதலீடு உற்பத்தியை அதிகரிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பிராந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

2027 ஆம் ஆண்டுக்குள் இந்த மதுபான ஆலை 2 மில்லியன் ஹெக்டோலிட்டர்கள் திறன் கொண்ட செயல்பாடுகளைத் தொடங்கும், மேலும் இது 5 மில்லியனாக வளர்ச்சியடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மதுபான ஆலை போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும் மற்றும் நுகர்வோருக்கு புதிய தயாரிப்புகளை வழங்கும்.

கிங்ஃபிஷர், ஹய்னக்கென் & ஆம்ஸ்டெல் போன்ற பிரபலமான பிராண்டுகள் இந்த வளர்ச்சியால் பயனடையும்.

வட மாநிலங்களில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வருமானத்தைக் கணக்கில் கொண்டு 20 கோடி மக்கள்தொகை கொண்ட உ.பி. மாநிலம் இந்தியாவின் முக்கிய மதுபான சந்தையாக கொடிகட்டி பறக்கும் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில், இந்தியாவின் பீர் சந்தை 7.7% CAGR இல் வளர்ந்து வருகிறது மற்றும் 2032 ஆம் ஆண்டுக்குள் 101.10 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.