டெல்லி: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று இன்னமும் உச்சத்தை நோக்கி நகர ஆரம்பித்து இருக்கிறது. 36 ஆயிரத்து 469 புதிய தொற்றுகள் இன்று பதிவாகி உள்ளன. இதன் மூலம், நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பானது 79, 46, 429 ஆக உயர்ந்துள்ளது.
இந் நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை அவர் தமது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தி உள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது: எனக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கையாக என்னை மருத்துவமனையில் சிகிச்கைக்காக சேர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன். என்னை பற்றிய கவலைகள் வேண்டாம். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel