டெல்லி: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது: கொரோனா அறிகுறிகளுடன் இருந்தநிலையில் சோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உங்களைப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய விளையாட்டு அமைச்சர் கிரேன் ரெஜ்ஜு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் என பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel