டெல்லி: மத்திய அமைச்சரவையில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அதன்படி, மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், தபஸ்ரீ சவுத்ரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா  செய்துள்ளதாகவும், தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சுகாதாரத்துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.