ம்பால்

ந்தியாவில் மணிப்பூர் மாநிலத்தில் முதன்முறையாக விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க. மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை விளையாட்டுத் துறைக்கு தனி பல்கலைக்கழகம் அமைக்கப்படவில்லை.     அந்த பெருமை மணிப்பூர் மாநிலத்துக்கு கிடைத்துள்ளது.   இந்தப் பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் அமைய உள்ளது.   இதற்கான மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.   அந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளிதுள்ளது

இம்மாநிலத்தின் தலைநகரான இம்பால் அருகே உள்ள கோவ்டிரக் என்னும் இடத்தில் இந்தப் பல்கலைக்கழகம் அமைய உள்ளது.   சுமார் 325 ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் செலவில் இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளது.    இங்கு விளையாட்டு சம்பந்தப்பட்ட தொழில்நுட்பம், மேலாண்மை, தேசிய பயிற்சி மையம் உள்ளிட்ட அம்சங்கள் அமைக்கப்பட உள்ளன.

இங்கு விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச தரத்தில் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.    விளையாட்டு சம்பந்தப்பட்ட பல படிப்புகள் இங்கு அறிமுகம் செய்யப்படும்.  இந்தப் பல்கலைக்கழகத்தின் மூலம் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறமையை மேலும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.