டெல்லி: இஸ்லாமிய அமைப்பான ஹிஸ்புத் தஹ்ரீரை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பு செயல்பட இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால், மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த அமைப்டிபில் தொடர்பில் இருந்த பலர் தமிழ்நாட்டில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஹிஸ்ப்-உத் தஹிரிர் அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது.
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின்படி, பயங்கரவாத அமைப்பாக இந்த ஹில்ப்-உத் தஹிரிர் அமைப்பை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலமாக பயங்கரவாதத்தை இந்த அமைப்பு பயன்படுத்தியதும் தெரிய வந்ததால், தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாத அமைப்பிற்கு இளைஞர்களை சேர்க்கும் செயல்களில் இந்த அமைப்பு ஈடுபட்டதாகவும் மத்திய அரசு தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பை உலகின் பல நாடுகள் தடை செய்துள்ள நிலையில், தற்போது இந்திய அரசும் தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, இந்த அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.