பாலினத்தையும் பெயரையும் அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய விண்ணப்பத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரியின் முறையீட்டிற்கு நிதி அமைச்சகம் அளித்துள்ள இந்த ஒப்புதல் இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றில் முதல் முறை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவின்படி, ஹைதராபாத்தில் பணிபுரிந்துவரும் மிஸ் எம். அனுசுயா, IRS நிதி அமைச்சகத்திடம் ஒரு மனுவை சமர்ப்பித்து, தனது பெயரை திரு எம் அனுகதிர் சூர்யா என்றும், அவரது பாலினத்தை பெண்ணிலிருந்து ஆணாகவும் மாற்ற அரசாங்கத்தின் ஒப்புதலைக் கோரினார்.
பாலின மாற்றம் செய்து ஆணாக மாறியுள்ள நிலையில் அவர் இந்த கோரிக்கையை வைத்தார். பாலின மாற்றம் தொடர்பான அவரது இந்த விண்ணப்பத்தை ஏற்று மத்திய அரசு முக்கிய உத்தரவை இன்று வெளியிட்டுள்ளது.