டெல்லி: நாடாளுமன்றத்தில் சரியாக 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். இது அவர் தாக்கல் செய்யும் 4வது பொது நிதிநிலை அறிக்கையாகும். இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்றுநோய் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பொருளாதார சரிவு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல சவால்கள் உள்ள நிலையில் நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தி தன்னுடைய பட்ஜெட்டை தாக்கல் செய்ய துவங்கினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பங்கு வர்த்தகமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 582.85 புள்ளிகள் உயர்ந்து 58,597.02 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 156.20 புள்ளிகள் உயர்ந்து 17,496.05 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.