டெல்லி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக  பிப்ரவரி 1ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மத்திய பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படுகிறது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார் என நாடாளுமன்ற  செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 அன்று தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் என்பது ஒரு காலண்டர் ஆண்டில் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஆகும். இது இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையுடன்  கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதைத் தொடர்த்து,  ஜனவரி 29 அன்று பொருளாதார ஆய்வறிக்கை, 2026 மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்றும் தாக்கல் செய்யப்பட உள்ளன.

1999 ஆம் ஆண்டில், அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பிப்ரவரி 28 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தாக்கல் செய்யாமல், பிப்ரவரி 27 (சனிக்கிழமை) அன்று மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போதைய வழக்கத்தின்படி, மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த நிலையில், நடப்பாண்டு, முதன்முறையாக ஞாயிறு அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்ந்து வரும் 28ந்தேதி அன்று தொடங்குகிறது. முதல்நாள் நாடாளுமன்றத்தின் இரு அவைககளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறது. இதற்கு குடியரசு தலைவர்  ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு  தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 தொடங்கி பிப்ரவரி 13 அன்று முடிவடையும் என்றும், நாடாளுமன்றம் மீண்டும் மார்ச் 9 அன்று கூடும் என்றும் ரிஜிஜு தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது  எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்திய அரசின் பரிந்துரையின் பேரில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பட்ஜெட் கூட்டத்தொடர் 2026-க்காகக் கூட்ட ஒப்புதல் அளித்துள்ளார். இந்த கூட்டத்தொடர்  இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

இந்த  பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 அன்று தொடங்கி 2026 ஏப்ரல் 2 வரை தொடரும்.

முதல் கட்ட கூட்டத்தொடர் 2026  ஜனவரி 28ல் தொடங்கி பிப்ரவரி 13 அன்று முடிவடையும்,

ஜனவரி 29 அன்று பொருளாதார ஆய்வறிக்கை

பிப்ரவரி 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல்

இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 9 அன்று மீண்டும் கூடும். இது அர்த்தமுள்ள விவாதத்திற்கும் மக்கள் சார்ந்த நிர்வாகத்திற்கும் ஒரு முக்கிய படியாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இடையில், பல்வேறு அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகளை நிலைக்குழுக்கள் ஆய்வு செய்ய இடைவெளி அளிக்கப்படும். நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரைப் போலவே, பட்ஜெட் கூட்டத்தொடரிலும் பல சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம் அல்லது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படலாம்.

AI உச்சி மாநாட்டை நடத்தும் இந்தியா

இதற்கிடையில், இந்த ஆண்டு பிப்ரவரியில் தலைநகரில் நடைபெறும் AI தாக்க உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். பாரிஸில் நடந்த AI அதிரடி உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி இணைத் தலைமை தாங்கினார். தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நிலைக்குழுவின் தலைவரான பாரதிய ஜனதா கட்சி (BJP) எம்.பி. நிஷிகாந்த் துபே, ANI-யிடம் கூறுகையில், அவர்கள் அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும், அந்த அறிக்கை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

[youtube-feed feed=1]