டெல்லி: மத்திய பட்ஜெட்டில் வரிவிதிப்பு, சுரங்கம் என 6 துறைகளுக்க சீர்த்திருங்கள் மற்றும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக நிதிய இமைச்சர் கூறினார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளார். நமது நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளது என கூறியதுடன், வரிவிதிப்பு, சுரங்கம் என 6 துறைகளில் சீர்திருத்தங்களை பட்ஜெட் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பா.ஜ.க 3-வது முறையாக ஆட்சியமைத்தபின் தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட் இதுவாகும். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்த பா.ஜ.க கடந்த ஜுலை மாதம் 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தது. தற்போது, 2-வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது,.
2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் 8வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட்டை வாசித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பட்ஜெட்டில் வரிவிதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, சுரங்கம், நிதித் துறை, மின்சாரம் மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் ஆகிய 6 துறைகளில் சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் என்று கூறினார்.
அதன்படி, 1) வரிவிதிப்பு, 2) நகர்ப்புற மேம்பாடு, 3) சுரங்கம், 4) நிதித் துறை, 5) மின்சாரம் 6) ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் ஆகிய 6 துறைகளில் சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் என்று கூறினார்.

“பிரதமர் தன் தானிய கிருஷி யோஜனா – வேளாண் மாவட்டங்களை வளர்க்கும் திட்டம்… எங்கள் அரசாங்கம் மாநிலங்களுடன் இணைந்து பிரதமர் தன் தானிய கிருஷி யோஜனாவை மேற்கொள்ளும்.
தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பு மூலம், இந்த திட்டம் குறைந்த உற்பத்தித்திறன், மிதமான பயிர் தீவிரம் மற்றும் சராசரிக்கும் குறைவான கடன் அளவுருக்கள் கொண்ட 100 மாவட்டங்களை உள்ளடக்கும். இது கலாச்சார உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது…”
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “அனைத்து MSME களின் வகைப்பாட்டிற்கான முதலீடு மற்றும் வருவாய் வரம்புகள் முறையே 2.5 மற்றும் 2 மடங்கு அதிகரிக்கப்படும்.
இது நமது இளைஞர்களுக்கு வளரவும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் நம்பிக்கையை அளிக்கும்.”