டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான  மத்திய பாஜக அரசின் அரசின் கடைசி முழு பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில்  செய்து வருகிறார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 7 லட்சமாக உயர்த்தி உள்ளார்.

மத்திய அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். ஏற்கனவே நான்கு முறை மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து ஐந்தாவது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும்  மத்திய அரசின் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பு உயர்வு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

நாட்டில் நடப்பு நிதியாண்டில், 6.50 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி தொடர்பான சில சலுகைகளையும் அறிவித்துள்ளார். அதுபோல, தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

அதன்படி,  தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ₹7 லட்சமாக உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்து உள்ளது. அதன்படி  வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.  ஆண்டிற்கு ஏழு லட்சம் வரை தனிநபர் வருமானம் பெறுவருக்கு இனி வருமான வரி இல்லை.

அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது 7 லட்சம் வரை இவர்கள் வருமான வரி கட்ட வேண்டியது இல்லை. அதேவேளையில்,  பழைய வரி பிரிவில் உள்ளவர்கள் 3 லட்சம் வரை வரி கட்ட தேவை இல்லை. தற்போது வரி விலக்கிற்கான உச்சவரம்பு 2.5 லட்சமாக இருந்து வரும் நிலையில், அது 3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

யார், யாருக்கு எவ்வளவு வரி

ரூ.0 – ரூ – 3 லட்சம் – வரி இல்லை

ரூ. 3 லட்சம் – ரூ. 6 லட்சம் – 5%

ரூ.6 லட்சம் – ரூ.9 லட்சம் – 10%

ரூ.9 லட்சம் – ரூ.12 லட்சம் – 15%

ரூ. 12 லட்சம் – ரூ.15 லட்சம் – 20%

ரூ.15 லட்சத்துக்கும் மேல் – 30%

இது புதிய ஆட்சியில் அனைத்து வரி செலுத்துவோருக்கும் பெரும் நிவாரணம் அளிக்கும்.  ஆண்டு வருமானம் ரூபாய் 9 லட்சம் உள்ள தனிநபர் 45,000/- மட்டுமே செலுத்த வேண்டும் இது அவரது வருமானத்தில் 5 சதவீதம் மட்டுமே. இப்போது செலுத்த வேண்டிய தொகையில் 25 சதவீதம் குறைப்பு,  அதாவது ` 60,000/-. அதேபோல, 15 லட்சம் ரூபாய் வருமானம் உள்ள தனிநபர்  ரூ. 1.5 லட்சம் அல்லது அவரது வருமானத்தில் 10 சதவீதம், தற்போதுள்ள ரூ. 1,87,500/-ல் இருந்து 20 சதவீதம் குறைக்கப்படுகிறது.

எனது மூன்றாவது முன்மொழிவு சம்பளம் பெறும் வகுப்பினர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உட்பட ஓய்வூதியம் பெறுவோருக்கானது, அவர்களுக்காக புதிய வரி முறைக்கு நிலையான விலக்கின் பலனை நீட்டிக்க நான் முன்மொழிகிறேன். 15.5 இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானம் கொண்ட ஒவ்வொரு சம்பளம் பெறுபவரும் இதன் மூலம் ரூபாய் 52,500 பயனடைவார்கள்.

தனிநபர் வருமான வரி குறித்த எனது நான்காவது அறிவிப்பு, நமது நாட்டில் 42.74 சதவீதமாக இருக்கும் மிக உயர்ந்த வரி விகிதம் பற்றியது. இது உலகிலேயே மிக உயர்ந்ததாகும். புதிய வரி விதிப்பில் அதிகபட்ச கூடுதல் கட்டணத்தை 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்க நான் முன்மொழிகிறேன். இதன் மூலம் அதிகபட்ச வரி விகிதம் 39 சதவீதமாக குறைக்கப்படும்.

புதிய வருமான வரி விதிப்பை இயல்புநிலை வரி விதிப்பாகவும் உருவாக்குகிறோம். இருப்பினும், குடிமக்கள் பழைய வரி முறையின் பலனைப் பெறுவதற்கான விருப்பம் தொடரும்.

இவை தவிர, இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வேறு சில மாற்றங்களையும் செய்து வருகிறேன். இந்த முன்மொழிவுகளின் விளைவாக நேரடி வரியாக ரூ. 37,000 கோடியும், மறைமுக வரிகளில் ரூ. 1,000 கோடி என மொத்தம் 38,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.  அதே சமயம் 3,000 கோடி வருவாய் கூடுதலாக திரட்டப்படும்’’ என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.