டெல்லி:  மத்தியநிதிநிலை அறிக்கையில்  எல்ஐசி பங்குகள் வெளியீடு, 60 லட்சம் வேலைவாய்ப்பு, 25000 கிமீ நெடுஞ்சாலைகள், சிறு, குறு, நடுத்தர தொழில் கடனுக்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார்.  4வது முறையாக பொதுநிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2வது முறையாக 2ஆவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட டேப்லட்டில் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் பட்ஜெட்டில்  பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி,  அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுரு.

எல்ஐசி பங்குகள் விரைவில் வெளியீடு எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும்

வரும் நிதியாண்டில், புதிதாக 25,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும், போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவசர கால கடன் உதவி திட்டங்கள் மூலம் 1.30 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெற்றுள்ள என்றும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன்,  சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வழங்கப்படும் அவசர கால கடன் உதவி திட்டம் 2023 மார்ச் வரை நீட்டிப்பு செய்யப்படுவதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசர கால கடன் வழங்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,  சிறு, குறு, தொழில் நிறுவனங்களின் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.