டெல்லி: மத்திய நிதி அமைச்சர் வாசித்து வரும் பொதுபட்ஜெட்டில், சென்னை மெட்ரோ விரிவாக்கத்துக்கு ரூ.63 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனறும், இதன் காரணமாக சென்னையில் 118 கிலோ மீட்டர் தூரம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூபாய் 1.03 லட்சம் கோடியில் புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும். நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
நாடு முழுவதும் மேலும் 11, 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். மூலதன செலவினங்களுக்காக மாநில அரசுகள், அதிகார அமைப்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும். கன்னியாகுமரி கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலை அமைக்கப்படும்.
காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ரூ.2,217 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை திட்டங்களுக்கு இதுவரை இல்லாத வகையில் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டங்கள் அடுத்த ஆண்டு ஜூன் 22 நிறைய நிறைவடையும். நாட்டில் உள்ள 72 சதவீதம் ரயில் பாதைகள் மின்மயம் ஆக்கப்பட்டுள்ளன. கொச்சி மெட்ரோ ரயில் திட்ட மேம்பாட்டு பணிக்கு மத்திய பட்ஜெட்டில் 1900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.