டெல்லி: இந்திய வரலாற்றில் முதல்முறையாக டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அவரது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்  என்றவர், சுயசார்பு திட்டத்தின் கீழ் 27 லட்ச கோடிக்கான ஊக்கத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுகாதார கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவுக்கு மேலும் இரண்டு தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும்.

தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய 3 அம்சங்களில் சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறது.

பிரதமரின் சுயசார்பு சுகாதார திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு.

நடப்பு பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்புற தூய்மை திட்டத்திற்கு 1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு.

கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கீடு. சுகாதார துறைக்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 137% கூடுதல் நிதி ஒதுக்கீடு. மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 64,184 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

ஊட்டச்சத்தை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்.

நீர்வளத்துறையில் ஜன் ஜீவன் மிஷன் அறிமுகம்.

உற்பத்தி துறைக்கு ரூ.1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு இந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

மூலதன செலவினங்களுக்கு ரூ.5.45 லட்சம் கோடி ஒதுக்கீடு.

தமிழகத்தில் ரூ.1.01 லட்சம் கோடியில் புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும்.