டெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று அறிவித்த பொதுபட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.

2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி,  விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் நலனில் அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.  அப்போது எதிர்க்கட்சி எம்பிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல், தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், “அனைத்து பயிர்களின் உற்பத்தி விலையைவிடக் குறைந்தபட்சம் 1.5 மடங்கு விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்கை மாற்றப்பட்டுள்ளது.

இந்தாண்டு மட்டும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு நிலை இரட்டிப்பாக்கப்பட்டது. இதன் மூலம் 1.5 கோடி விவசாயிகள் பலனடைந்தனர்.

அதேபோல அரசின் நேரடி கொள்முதலும் நிலையான வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தொகையும் அதிகரித்துள்ளது.

கோதுமை விவசாயிகளுக்கு 2013-14ஆம் ஆண்டு 33,874 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது 2019-20 ஆண்டில் 62,802 கோடி ரூபாயாகவும் 2020-21 ஆண்டில் 75,060 கோடி ரூபாயாகவும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

2013-14ஆம் ஆண்டில் பருத்தி விவசாயிகளுக்கு 90 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது.

இந்தத் தொகை 2020-21ஆம் ஆண்டில் 25 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 43.36 கோடி விவசாயிகள் பலனடைந்துள்ளனர்” என்றார்.

அதேபோல இந்தாண்டு விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் இலக்கை ரூ .16.5 லட்சம் கோடியாக உயர்த்தவுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

2013-14 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கோதுமை அளவு ரூ .33,874 கோடியாக இருந்தது, இது 2019-20ல் ரூ .62,802 கோடியாக இருந்தது 43.36 லட்சம் கோதுமை வளரும் விவசாயிகள் எம்.எஸ்.பி.யின் கீழ் அரசு கொள்முதல் செய்வதன் மூலம் பயனடைந்தனர், இதற்கு முன்பு 35.57 லட்சம் மட்டுமே பயன்பெற்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

விவசாய கொள்முதல் படிப்படியாக அதிகரித்து விவசாயிகளுக்கு பயனளிக்கிறது என்றவர்,  மூன்று பண்ணை சட்டங்களுக்கு எதிராக கூச்சலிடும் எதிர்க்கட்சி முழக்கத்தின் மத்தியில்இ  விவசாயிகள் கோதுமை எம்எஸ்பிக்கு ரூ .75,100 கோடி நிதியாண்டில் செலுத்தி உள்ளதாகவும், வரும் 2021-22ம் ஆண்டுகளில்  விவசாய கடன் இலக்கு ரூ .16.5 லட்சம் கோடி என்றும் கூறினார்.

கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன் வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் e-Nam திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.