டெல்லி: மத்திய நிதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் வாசித்து வரும்  பொதுபட்ஜெட் 2021-22ல் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ரயில்வே துறைக்கு முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், 2023ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில் சேவைகளும் 100 சதவிகிதம் மின்மயமாக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது, சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

அகல ரயில்பாதை வழித்தடங்கள் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 100% மின்மயமாக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும்.

139 ஜிகாவாட் அளவுக்கான மின்உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும்,  ரயில்வே துறைக்கு 1,10,055 கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1,07,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.