டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறதுநிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று காலை 11 மணிக்கு  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து. சுமார் 1மணி 45 நிமிடம் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார்.

இந்த உரையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதாக அறிவித்திருப்பதுடன், நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை  உள்பட சில துறைகளில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

வருமான வரித்துறை குறிப்பிடத்தகுந்த எந்தவொரு மாற்றமும் செய்யப்படாத நிலையில்,  75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச்சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ஓய்வூதியம் மற்றும் வங்கி வட்டிகளை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை என்ற ஒரே ஒரு சலுகை மட்டுமே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரி விதிப்பில் இருந்து விலக்கு வருமான வரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க புதிய குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க புதிய குழு அமைக்கப்படும்,

கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை படைத்துள்ளோம் என்றவர், 2014ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 3.31 கோடியாக இருந்தது கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

5ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 41% பங்கு வழங்கப்படும்  என்றும் தெரிவித்தார்.