சென்னை: பத்திரிகை புகைப்படக் கலைஞராக பணியாற்றிய குமார் மரணத்தையொட்டி அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர்  அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

சம்பள பிரச்சினையால் விரக்தியடைந்த யுஎன்ஐ புகைப்படக் கலைஞர் குமார் கடந்த பிப்ரவரி மாதம் அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பிரச்சினையாது. இதுகுறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குமார் மரணத்துக்கு  இரங்கல் தெரிவித்ததுடன்,  ‘‘30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை புகைப்படக் கலைஞராக பணியாற்றிய டி.குமார் அகால மரணமடைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த புகைப்படக் கலைஞரின் குடும்ப சூழ்நிலை கருதி, சிறப்பு நேர்வாக பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’’ என்ற கூறியிருந்தார்.

அதன்படி, டி.குமார் மறைவையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் வழங்கினார்.

அதுபோல தமிழரசு அலுவலகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி முரளி கிருஷ்ணன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காசோலையும் வழங்கினார்.