வாஷிங்டன் :
அமெரிக்க போர்க்கப்பலான தியோடர் ரூஸ்வெல்டின் கேப்டன் பிரட் கோஸியர் தனது கப்பலில் உள்ள பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இந்த கப்பலில் உள்ள 5000 வீரர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த செய்தியை அறிந்த அந்த கப்பலில் இருந்த வீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் டிரம்ப் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்நிலையில், கேப்டன் பிரட் கோஸியர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதனை எதிர்பாராத கோஸியர், இது போர் நடக்கும் காலம் அல்ல, இது சாதாரண நேரம் இந்த நேரத்தில் 5000 ராணுவ வீர்களின் விலைமதிப்பற்ற உயிரை தொற்று நோய்க்கு இழக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே தான் செயல்பட்டதாக தெரிவித்தார்.
இவருக்கு ஆதரவாக ஒய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை மன்னிக்க முடியாத குற்றம் என்று குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், கப்பலின் கேப்டன் பணி நீக்கம் செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்து செல்லும் போது, கப்பலில் இருந்த ராணுவ வீரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு கேப்டன் கோஸியருக்கு ஆதரவாகவும், டிரம்ப்-க்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தவறிய டிரம்ப் அரசின் நிர்வாகத்துக்கு எதிராக நாடுமுழுக்க பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு நிலவிவரும் வேலையில், ராணுவவீரர்களும் போர்க்கொடி தூக்கியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ராணுவ வீரர்கள் கேப்டன் கோஸியருக்கு உற்சாக வழியனுப்பும் நிகழ்ச்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. அந்த காணொளி ….