உனாவ்:
குஜராத் மாநிலம் உனாவில் கடந்த 2016ம் ஆண்டு இறந்த மாட்டின் தோலை உரித்தததாக சிலர், பசு பாதுகாவலர் களால் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், எங்களை குடிமக்களாக கருத முடியாவிட்டால் எங்களை நாடு கடத்திவிடுங்கள் என்று பாதிக்கப்பட்ட நபர், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
எங்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, எங்களது அடிப்படை உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பு இழந்துவிட்டது என்று தெரிவித்துள்ளவர்கள், உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாவிட்டால்,எங்களை கருணை கொலை அனுமதியுங்கள், அல்லது நாடு கடத்துங்கள் என்று வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 11ந்தேதி குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனா நகரில் இறந்த பசுவை தோலுரித்ததற்காக சர்வையா குடும்பத்தைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களை உயர் சாதி தர்பார் சமூகத்தைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் நடத்தியவர்கள் , சர்வையாக்கள் பசுமாட்டைக் கொன்று தோலை உரித்தனர் (பசு வதை) என்று குற்றம் சாட்டினர். தாக்குதலின் போது, சர்வாயா சகோதரர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். மற்றவர்களை ஒரு காரின் பின்புறத்தில் கட்டி கம்புகள், இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலானது.
இதுகுறித்து சோம்நாத் மாவட்ட நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இதுவரை சரியான முறையில் விசாரணை நடைபெறாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குடியரசுத் தலைவருக்கு பகிரங்கமாக கடிதம் எழுதி உள்ளனர்.
அந்த கடிதத்தில், “உனா அடித்து நொறுக்கப்பட்ட சம்பவளாகல், எங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பை இழந்து விட்டோம் என்றும், “இப்போது, அரசாங்க அதிகாரிகள் நாங்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது போல் நடந்து கொண்டிருக்கிறார்கள். எங்களை குடிமக்களாக கருத முடியா விட்டால், எங்கள் குடியுரிமை ரத்து செய்து விடுங்கள், எங்களை பாகுபாட்டை எதிர்கொள்ளாத ஒரு நாட்டிற்கு நாடு கடத்திவிடுங்கள் என்று தெரிவித்து உள்ளனர்.
தாங்கள் தாக்கப்பட்டது குறித்து, மாநில அரசு சிறப்பு நீதிமன்றத்தையும் சிறப்பு அரசு வழக்கறிஞரையும் நியமமிக்கும் என்று உறுதியளித்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு விவசாய நிலம், வீடுகளுக்கான இடங்கள், வேலைவாய்ப்பு போன்றவையும் தருவதாக அப்போதைய முதல்வர் ஆனந்திபென் படேல் தெரிவித்திருந்தார், “ஆனால் அவரோ அல்லது எந்த மாநில அரசாங்க பிரதிநிதியோ இதுவரை எங்களை சந்திக்கவில்லை, எங்களது எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும், தங்களது உரிமைகளுக்கு ஜனாதிபதியால் உத்தரவாதம் அளிக்க முடியாவிட்டால், எங்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும், நீதி கோரும் எங்கள் பல வேண்டுகோள்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கவில்லை என்றால், ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே தங்களைத் தாங்களே தற்கொலை செய்துகொள்வோம் என்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.