இஸ்லாமாபாத்
ஐநா சபை பாகிஸ்தானிடம் இம்ரான் கானை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைகபட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை
”முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தடுப்புக் காவல் தன்னிச்சையானது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது. ஆகவே அவரை உடனடியாக விடுதலை செய்து இழப்பீடு வழங்கவேண்டும்”
எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் கடந்த ஏப்ரல் 2022-ல் இம்ரான்கான் வெளியேற்றப்பட்டதிலிருந்து அவருக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகள் குறித்து ஐ.நா. குழு தீவிர கவலைகளை எழுப்பி உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்தக் கோரிக்கைக்கு பாகிஸ்தானின் அரசு, இது உள்நாட்டு விவகாரம் என பதிலளித்துள்ளது.