அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செப்டம்பரில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (UNGA) வருடாந்திர உயர்மட்ட அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றும் பேச்சாளர்களின் தற்காலிக பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் 80வது அமர்வு செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். உயர்மட்ட விவாதம் செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் 23 ஆம் தேதியும் பிரதமர் மோடி செப்டம்பர் 26 ஆம் தேதியும் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவார்கள் என்று தெரிகிறது.

பிரேசில், இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அரசுத் தலைவர்களும் ஐ.நா. பொதுச் சபை விவாதத்தில் உரையாற்ற உள்ளார்கள்.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா செல்ல உள்ள பிரதமர் மோடி அதிபர் டிரம்பை சந்தித்து இருதரப்பு வர்த்தகம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.