நியூயார்க்: 

பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் அமெரிக்காவை, ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான அமெரிக்க நிர்வாகத்தின் அறிவிப்பை ஐநா பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்து, அரசாங்கங்கள், நகரங்கள், மாநிலங்கள், வணிகங்கள் மற்றும் காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள லட்சிய நடவடிக்கை எடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன் என்று நேற்று வெளியிட்ட தன்னுடைய அறிக்கையில் அண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.