லண்டன்:

கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பேட்ஸ்மேன் அடித்த பந்து  அம்பயர் ஜான் வில்லியம்ஸ் தலையில் கடுமையாக தாக்கிய நிலையில்,  மைதானத்திலேயே சுருண்டு கீழே விழுந்தவர், ஒரு மாத கால சிகிச்சைக்கு பின் அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின்போது, அம்பயர் தலையில் பந்து தாக்கியதால் சுருண்டு விழுந்த  நடுவர் மருத்துவமனையில் ஒரு மாத கால சிகிச்சைக்கு பின் உயிரிழந்துள்ளார்.

80 வயதான அம்பயர் ஜான் வில்லியம்ஸ் பெம்போக்ஷைரில் உள்ள ஹன்டல்டன் பகுதியை சேர்ந்தவர். கடந்த மாதம் 13ந்தேதி  பெம்ப்ரோக் – நார்பெத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது டிவிஷன் கௌன்டி போட்டியில் நடுவராக இருந்தார். போட்டியின் போது ஜான் வில்லியம்ஸ் தலையில் பந்து பலமாக தாக்கியதில் மைதானத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார்.

இதனால் கோமா நிலைக்கு சென்ற அவரை உடனடியாக வேல்ஸ் யுனிவர்சிட்டி மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த நிலையில், சிகிச்சை   பலனின்றி ஜான் வில்லியம்ஸ் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஜான் வில்லியம்ஜ் கிரிக்கெட்டிற்காக தனது வாழ்நாளில் அதிக நேரங்களை செலவிட்டுள்ளார். கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட இவரின் மறைவிற்கு உள்ளூர் மக்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.