
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ், அதிரடியாக பவுலிங் செய்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தற்போதைய நிலையில், ஆஸ்திரேலிய அணி 130 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, இந்தியாவைவிட 114 ரன்கள் பின்தங்கியுள்ளது. அரைசதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மார்னஸ் லபுஷேனை எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார்.
பின்னர், பேட் கம்மின்ஸை டக்அவுட் ஆக்கினார். இந்த ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆவதால், இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக சேர்ந்து எல்பிடபிள்யூ முறையில், மொத்தம் 5 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.
இதில், இன்றையக் கணக்கு மட்டும் இதுவரை 3. இந்தியா சார்பில் 4 பந்துவீச்சாளர்கள் மட்டுமே வீசிவரும் நிலையில், முகமது ஷமிக்கு இன்னும் விக்கெட் கிடைக்கவில்லை.