சென்னை: உக்ரைன் ரஷியா போர் காரணமாக, உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உதவியாக, சென்னை எழிலத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, 1070 என்ற அவசர உதவி தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு  உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க அயலகத் தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை மூலம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்போது அதற்கென பிரத்யேக உதவி எண்ணாக  1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்து உள்ளது. மேலும் எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்கள் சேமிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே  உக்ரைனில் உள்ள தமிழர்கள் நாடு நாடு திரும்புவதற்கு உதவி தேவைப்பட்டால் அணுகலாம் என்று தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, http://nrtamils.tn.gov.in என்ற இணையம் வாயிலாக உதவி கோரலாம் என்று அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.