புதுடெல்லி:
உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
போருக்கு முன் 100 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது 200 ரூபாயாக விற்பனையாகிறது.
இதுமட்டுமின்றி நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்வடைந்து உள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel