காபூல்

க்ரைன் நாட்டில் இருந்து மீட்புப்  பணிகளுக்காக ஆப்கானிஸ்தான் சென்றுள்ள விமானம் காபூலில் இருந்து கடத்தப்பட்டடதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதில் இருந்து உலகெங்கும் கடும் பதற்றம் நிலவுகிறது.   பல நாடுகளில் இருந்தும் தங்கள் மக்களைக் காப்பாற்ற அந்தந்த அரசுகள் தீவிரமாக ஏற்பாடுகள் செய்து வருகின்றன;   அவ்வகையில் உக்ரைன் நாட்டில் இருந்து காபூலுக்கு அந்நாட்டு மக்களை மீட்க ஒரு விமானம் அனுப்பப்பட்டது.  அந்த விமானம் கடத்தப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

இது குறித்து உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் யெல்ஜெனி யெனின், “எங்கள் நாட்டு மகக்ளை மீட்க நாங்கள் அனுப்பிய விமானம் கடந்த ஞாயிறு அன்று காபூலில் இருந்து கடத்தப்பட்டுள்ளது.   அந்த விமானம் உக்ரைன் நாட்டு மக்களை மீட்பதற்குப் பதிலாக அடையாளம் தெரியாத சில பயணிகளுடன் ஈரானுக்குக் கடத்தப்பட்டுள்ளது.

நாங்கள் மேற்கொண்டு மூன்று முறை விமானங்களை அனுப்பினோம் .  ஆனால் உக்ரைன் மக்களால் விமான நிலையங்களுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.   ஆகவே எங்களது மீட்பு முயற்சிகள் தோல்வியில் முடிந்து விட்டது” எனத் தெரிவித்துள்ளார்.    அதே வேளையில் உக்ரைன் விமானம் கடத்தப்படவில்லை எனமற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

உக்ரைன் நாட்டின் ஊடகச் செய்தியில் உக்ரைன் விமானம் எதுவும் கடத்தப்படவும் இல்லை, சிறை பிடிக்கப்படவும் இல்லை என உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.   மேலும் உக்ரைன் விமானம் கடத்தப்பட்டதாக வரும் செய்திகள் தவறானவை எனவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.