உக்ரைன் போரில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக வெளியான செய்திக்கு ரஷ்யா ஒரு மந்தமான மற்றும் தயக்கமான பதிலை மட்டுமே அளித்துள்ளது.

மார்ச் 11 ஆம் தேதி பிற்பகுதியில், உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக செய்தி வெளியான உடன் ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் “வரும் நாட்களில் அமெரிக்க பிரதிநிதிகளுடனான தொடர்புகளை நாங்கள் நிராகரிக்கவில்லை” என்று கூறினார்.
அதேவேளையில், அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷ்ய உளவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா பெரியளவில் எதையும் வெளிப்படுத்தாதை அடுத்து இந்த போர் நிறுத்தம் ரஷ்யாவுக்கு எந்தளவுக்கு அவசியம் என்பது குறித்தும், ரஷ்யா-வை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர அமெரிக்கா என்ன மாதிரியான நிர்பந்தம் மேற்கொள்ளும் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.