வெளிநாட்டில் இருந்து வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தில் சலுகை வழங்க உள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
தச்சர்கள், கொத்தனார்கள் மற்றும் மேற்கூரை வேலை உள்ளிட்டவற்றில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவு வேலைசெய்கின்றனர்.
கட்டுமானப் பணிகளுக்கான தொழிலாளர்கள் தேவை அதிகரித்து வருவதை அடுத்து அவர்களுக்கான விசா நடைமுறைகளில் தளர்வுகள் வழங்கப்பட உள்ளதாக இங்கிலாந்து உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட கட்டுமான தொழில்களில் பயிற்சி பெற்ற தகுதியான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசா கட்டணத்திலும் சலுகை வழங்க அனுமதி அளித்துள்ளது.