டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் என்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 31 மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய கோரிய இந்த வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழு தனது பதிலை பிரமாணப்பத்திரமாக இன்று தாக்கல் செய்தது.
அதில் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று யுஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை. எனவே இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.